Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல்! – ஏமனில் 30 பேர் பலி!

Advertiesment
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல்! – ஏமனில் 30 பேர் பலி!
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:14 IST)
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கும்பல் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏமனில் அரசு படைகளுக்கும், ஹவுதி புரட்சி கும்பலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. ஏமன் அரசு ராணுவத்திற்கு சவுதி ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் சவுதி கப்பல்களை ஹவுதி புரட்சி கும்பல் தாக்கிய சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முகாமிட்டுள்ள ஏமனின் மரீப் மத்திய மாகாணத்தில் சவுதி தலைமையிலான வான்வெளிப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 13 வாகனங்களை சேதமடைந்த நிலையில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.