Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளையும் சோதனை தொடரும்: ஐடி அதிகாரிகளின் அறிவிப்பால் சசிகலா உறவினர்கள் அதிர்ச்சி

Advertiesment
நாளையும் சோதனை தொடரும்: ஐடி அதிகாரிகளின் அறிவிப்பால் சசிகலா உறவினர்கள் அதிர்ச்சி
, புதன், 27 டிசம்பர் 2017 (22:22 IST)
கடந்த நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தினர் குறிவைக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் இன்று மாலை மீண்டும் வருமான வரித்துறையினர் சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நாளையும் வருமானவரி சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி நாளை இன்னும் அதிக இடங்களில் சோதனை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்று நடைபெற்று வரும் சோதனையில் ஏற்கனவே ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இன்னும் நிறைய ஆவணங்கள் நாளை கைப்பற்றப்படும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் சசிகலா உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, ஸ்ரீ சாய் நிறுவனம், ஸ்ரீ சாய் கார்டன், இளவரசியின் மருமகனுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை: உளவுத்துறை, போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு!