தக்காளிக்கு பதில் ஆப்பிள் சாப்பிடுங்கள் என்றும் தக்காளியும் ஆப்பிளும் ஒரே விலை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலுடன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது என்பதும் கிலோ 150 ரூபாய் வரை தக்காளி விலை விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்பட்டது
தற்போது ஓரளவு தக்காளி விலை குறைந்து இருந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என்றும் ஏனெனில் இரண்டும் ஒரே விலையில் தான் இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
எடை கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளது என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொண்டோம் என்றும் திமுக அரசு அதை செய்ய தவறிவிட்டது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்