Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடைக்கானலில் கட்டண சுங்கச்சாவடி!

Advertiesment
கொடைக்கானலில் கட்டண சுங்கச்சாவடி!
, வியாழன், 30 ஜூன் 2022 (12:23 IST)
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாகனங்களுக்கு சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் ஒன்று. கோடைக்கால சீசன் தொடங்கினாளே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல் நோக்கி பயணிப்பது வழக்கமே. இந்த ஆண்டும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் கொடைக்கானலில் முகாம் இட்டனர். இம்முறை கொடைக்கானலில் நடைபெற்ற கோடை விழாவும் மக்களை வெகுவாக கவர்ந்தது. 
 
இந்நிலையில் கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் இதில் ஒன்றாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுங்கச்சாவடி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதன்படி பேத்துப்பாறை ஆதி மனிதன் குகை, ஐந்தருவி செல்லும் பகுதி, பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் கோவில் காட்சி முனைகள் செல்லும் பகுதி, மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா, ஏரிப் பகுதிக்குச் செல்லும் வழிகள், கூக்கால் ஏரி, நீர்வீழ்ச்சி காட்சி முனைகள் ஆகிய இடங்களில் கட்டண சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இட்லி துணியை ஏன் சுத்தம் செய்யல..! – காதை கடித்த அம்மா உணவக மேற்பார்வையாளர்!