Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் தொடங்குகிறது கோடைவிழா! – கொடைக்கானலில் குவியும் பயணிகள்!

Advertiesment
Flower Contest
, செவ்வாய், 24 மே 2022 (11:20 IST)
கொடைக்கானலில் இன்று முதல் கோடை விழா தொடங்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல் நோக்கி பயணித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண சுற்றுலா பயணிகள் பலரும் கொடைக்கானல் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா இன்று தொடங்கி ஜூன் 2 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

கோடை விழாவை கொண்டாடும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இன்று முதல் கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடங்குவதால் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூஸ் கடை வழியாக ஓட்டை போட்டு அடகு கடை கொள்ளை! – வேலூரில் அதிர்ச்சி!