Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நிதி முதல் தவணை வழங்கும் திட்டத்திற்கு டோக்கன்

Advertiesment
முதல் தவணை
, திங்கள், 10 மே 2021 (21:38 IST)
கரூர் அடுத்த நெரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த கொரோனா நிதி முதல் தவணை வழங்கும் திட்டத்திற்க்காக ரூ 2 ஆயிரம் வழங்கும் பணிக்கான டோக்கன் வழங்கும் பணியில் கிருஷ்ணராயபுரம் முன்னாள் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் மற்றும் நெரூர் வடபாகம் முன்னாள் தலைவர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.
 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியும், கிருஷ்ணராயபுரம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வுமான கீதா மணிவண்ணன் ஆகியோர் நேற்று தங்களை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையிலும், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் திமுக வில் இணைத்து கொண்டனர். இந்நிலையில், இன்று நெரூர் வடபாகம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடனும், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின் படி தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை, 165 நெரூர் வடபாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராயன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகி, பொதுமக்கள் என்று ஏராளாமனோர் கலந்து கொண்டனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா கால அவசரத் தேவைக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு !