இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால்
சென்னையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது
இந்த நிலையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தின் பிற பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது
மேலும் தமிழகத்தில் புதியதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள், அதுகுறித்து பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. இன்றைய ஆலோசனைக்கு பின் முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது