Publish Date: Thu, 17 Feb 2022 (19:30 IST)
Updated Date: Thu, 17 Feb 2022 (19:31 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 1,252 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,252 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,768 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது