Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5000ஆக குறைந்தது இன்றைய தமிழக கொரோனா பாதிப்பு!

5000ஆக குறைந்தது இன்றைய தமிழக கொரோனா பாதிப்பு!
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:47 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 5 ஆயிரம் என கொரோனா பாதிப்பு குறைந்தது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,104 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 34,15,986 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 839 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 21,027 என்றும், இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,782 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவலர்