இன்று அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக் குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவிப்பு.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மே மாதத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டில் மே மாதத்தில்தான் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது. தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பர்க்கப்பட்டது.
ஆனால் சனிக்கிழமை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பு வெளியாக நிலையில் இன்று அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக் குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.