சென்னையில் கடந்த சில நாட்களாக குறிப்பாக 5 மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் படிப்படியாக தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததை அடுத்து பெட்ரோல் ரூ99ஐயும், டீசல் விலை ரூ.93ஐயும் நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து உள்ளது அடுத்து ஒரு லிட்டர் ரூ.98.40 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் விலை 27 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் ரூ.92.58 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இந்த விலையேற்றம் காரணமாக சென்னையில் நாளை அல்லது நாளை மறுநாள் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வரிகளை மாநில மற்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து அந்த வரிகளை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்