கடந்த 255 நாட்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 256 ஆவது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 என்றும், சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 என்றும் விற்பனையாகி வருகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த ஆதாயத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.