Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வா?

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வா?
, வியாழன், 24 மார்ச் 2022 (07:45 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், மற்றும் டீசல் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.91 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.95 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருவதால் எதிர்காலத்தில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐநாவில் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி: இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை!