ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியானதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்கள் கணித்து இருந்தனர்.
அதேபோல் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடங்கிவிட்டது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 92.70 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை இன்று ஒரே நாளில் 19 காசுகள் உயர்ந்து 86.09 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களிலேயே பெட்ரோல் விலை ரூபாய் 100ஐயும், டீசல் விலை ரூபாய் 90ஐயும் தொட்டு விடும் அபாயம் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயரும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.