Publish Date: Mon, 17 Jan 2022 (06:59 IST)
Updated Date: Mon, 17 Jan 2022 (06:59 IST)
கடந்த எழுபத்தி மூன்று நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறாமல் இருப்பதன் காரணமாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று 74வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகிறது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடையும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்பது குறிப்பிடத்தக்கது