Publish Date: Sun, 16 Jan 2022 (13:27 IST)
Updated Date: Sun, 16 Jan 2022 (13:29 IST)
டோங்கா நகரில் நேற்று பதிவான நில அதிர்வு சென்னையிலும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டோங்கா நாட்டில் நேற்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்பதும் இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் டோங்கா நாட்டில் நேற்று இரவு 8 மணிக்கு பதிவான எரிமலையின் பூகம்பம் சென்னையிலும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் உள்ள காற்றழுத்தமானி லேசான அதிர்வலைகள் ஏற்பட்டதாகவும் இது டோங்கா நாட்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் தாக்கம் தான் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது