Publish Date: Tue, 02 Nov 2021 (08:04 IST)Updated Date: Tue, 02 Nov 2021 (08:07 IST)
கடந்த சில மாதங்களாகவே சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர்
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூபாய் 106.66 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதேநேரத்தில் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்பதால் நேற்று வெளியான 102.59 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.