Publish Date: Mon, 01 Nov 2021 (09:15 IST)
Updated Date: Mon, 01 Nov 2021 (09:17 IST)
கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ள நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மட்டுமே உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சற்று முன் வெளியான தகவலின்படி வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூபாய் 268 உயர்ந்துள்ளதாகவும் இதனை அடுத்து 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் விலை ரூபாய் 2133 என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கான விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் ரூபாய் 915.50 என்ற விலைக்கே விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயராமல் இருந்தது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது