Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டீசல் விலை உயர்வு: ரூ.94ஐ நெருங்கியது!

டீசல் விலை உயர்வு: ரூ.94ஐ நெருங்கியது!
, ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (07:07 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் விற்பனை ஆகிக் கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டீசல் விலை மட்டும் உயர்ந்த நிலையில் இன்றும் அதே போல் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று டீசல் விலை ரூபாய் இருபத்திமூன்று காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து இன்றைய டீசல் விலை சென்னையில் ரூபாய் 93.69 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் விலை உயரவில்லை என்பதும், நேற்றைய விலையான ரூபாய் 98.96 என்ற விலையிலேயே ஒரு லிட்டர் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டுமே மீண்டும் ரூபாய் 100ஔ தொட்டு விடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23.22 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!