Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹேர் கட்டுக்கு ரூ.2 கோடி விலை - ITC-க்கு வந்த சோதனை!

ஹேர் கட்டுக்கு ரூ.2 கோடி விலை -   ITC-க்கு வந்த சோதனை!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (13:21 IST)
டெல்லியில் தவறாக ஹேர்கட் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 
டெல்லியில் உள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டலான ஐடிசி மவுரியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடலிங் துறையை சேர்ந்த 42 வயது பெண் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். அவர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் 4 இன்ச் மட்டுமே முடி வெட்ட சொல்லியுள்ளார். ஆனால் தவறுதலாக  மொத்தமாக வெட்டியுள்ளார். அதோடு தலையில் அமோனியாவை கொண்டு சிகிச்சை செய்ததிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தேசிய நுகர்வோர் ஆணையத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடிசி நிர்வாகம் அந்த பெண்ணுக்கு இரண்டு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் பொண்டாட்டி குளிக்க மாட்றா.. விவகாரத்து குடுங்க! – நீதிமன்றத்தில் கதறிய கணவன்!