சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இயற்றப்பட இருப்பதை அடுத்து தமிழக ஆளுநர் திடீரென அவசரமாக டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் 6 மாதம் கழித்து இந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் இயற்ற போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.