Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு 8 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் கனமழை: வானிலை அறிவிப்பு..!

Mahendran
புதன், 7 ஆகஸ்ட் 2024 (13:18 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் நேற்று கூட சென்னையில் நல்ல மழை பெய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்று மாலை மற்றும் இரவு தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை  காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மாலை அல்லது இரவு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, ஆகிய எட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனை அடுத்து மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் கவனமாக தங்கள் வாகனத்தை இயக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments