Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Advertiesment
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

J.Durai

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (20:31 IST)
நேற்று இரவு முதல் கொட்டி திர்த்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையானது கொட்டி தீர்த்து வருகிறது.
 
இந்த நிலையில் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய செம்பரம் பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
 
இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 14.50 அடி உயரமும்,மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 1441 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
 
நீர்வரத்தானது 577 கன அடி வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதாலும் ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 
தற்போது செம்மரம்பாக்கம் ஏரிகளின் மதகுகள் சீரமைக்கும் பணி நடந்து பெற்று வரும் நிலையில் மழையின் காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் ஏரியில் 22 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரான்- இஸ்ரேல் போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை என்ன?