Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றிய விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Rajiv Gandhi
, திங்கள், 3 ஜூலை 2023 (10:06 IST)
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில் இன்று குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம்
 
இந்த குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இவர்களிடம் 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இன்னும் 2 தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு கூறிய நிலையில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி விலையை அடுத்து துவரம்பருப்பு விலை கிடுகிடு உயர்வு. இரு மடங்கு உயர்ந்ததால் அதிர்ச்சி..!