அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த சிறுமி டான்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைப் பட்டாவும், ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள ஆணை வழங்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள வீராபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
அதன்படி தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கபட்டு அவருக்கு உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பி
பின்னர் சிறுமி டானியாவை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், சிறுமி டான்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைப் பட்டாவும், ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்க்கொள்ள ஆணை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தன் பதிவிட்டுள்ளதாவது:
முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் ரூ. 1.48 இலட்சம் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ. 2.10 இலட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையினையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.