சவரனுக்கு ரூ.184 குறைந்தது தங்கம் விலை!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:14 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச அரங்கில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதால் சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தங்கம் விலை திடீரென ஒரு சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4500.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் ரூ.36000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4864.00 என்றும், ஒரு சவரன் ரூபாய் 38912.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.71.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71700.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்