Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு: ஜெட் வேகத்தில் உயரும் சென்னை

Advertiesment
மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு: ஜெட் வேகத்தில் உயரும் சென்னை
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (19:02 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1596 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 55 பேர்கள் என்பதும் சென்னை மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது. இதனையடுத்து சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 358 ஆகும். சென்னையை அடுத்து இன்று தென்காசியில் 5 பேர்களும், விழுப்புரத்தில் 4 பேர்களும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சையில் தலா 3 பேர்களும், கள்ளக்குறிச்சியில் இருவரும், கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சென்னையில் 358 பேர்களும், கோவையில் 134 பேர்களும், திருப்பூரில் 100 பேர்களும், திண்டுக்கல்லில் 76 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், நெல்லையில் 62 பேர்களும், செங்கல்பட்டில் 56 பேர்களும், நாமக்கல்லில் 51 பேர்களும், திருச்சியில் 50 பேர்களும், தஞ்சையில் 49 பேர்களும், திருவள்ளூரில் 48 பேர்களும், மதுரையில் 46 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.மு.க பிரமுகரின் கிட்னி சிகிச்சைக்கு உதவிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின் செயல் !