தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பூஸ்டர் டோஸ் முகாம் நடத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் 60 வயதுக்கு மேலானவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் 2 டோஸ் செலுத்திய பின்னர் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றும் சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது என்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
பூஸ்டர் டோஸ் தடுப்பு சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தகுதி உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது