Publish Date: Wed, 26 Jan 2022 (14:04 IST)
Updated Date: Wed, 26 Jan 2022 (15:27 IST)
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் கோரினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
பாரதிய ஜனதா கட்சியின் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் உள்ள தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். அதாவது, சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்க முடிவில்லை என பேசியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில், அவரது கருத்து கட்சியினுடையது ஆகாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை. மேலும் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நயினார் நாகேந்திரன் விஷயத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
அதிமுக, பாஜக இடையிலான அரசியல் உறவு சமூகமாக இருப்பதாகக் கூறிய அவர், அந்த உறவில் எவ்வித பதற்றமும் ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.