மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக ஆபத்தானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி, அவரை களங்கப்படுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரின் தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மதத் தலைவராக மாற்ற நினைப்பதுதான் பாஜகவின் எண்ணம் என ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சசிகலா, ஜெயக்குமார் உள்ளிட்ட பல அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இது குறித்து விவாதம் செய்ய தயார் என்றும் அதிமுகவினர் யாரேனு தன்னுடன் விவாதிக்க தயாரா என்றும் அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.
ஆனால் அரசியல் வியாபாரி அண்ணாமலையுடன் விவாதிக்க தயார் இல்லை என அதிமுகவினர் கூறிய நிலையில் தற்போது மீண்டும் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை அண்ணாமலை தீவிர ஹிந்துத்வா தலைவர் என்று கூறிய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.