Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:09 IST)
தமிழகத்தில் இன்று 8வது கட்டமாக மெகா தடுப்பூசியை மையம் செயல்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை பொதுமக்கள் மத்தியில் கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக தமிழக அரசின் மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பதும் ஒவ்வொரு மெகா தடுப்பூசி மையங்களிலும் லட்சக்கணக்கானோர் தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை எட்டாவது கட்டமாக தடுப்பூசி மையம் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் தீபாவளி விடுமுறை மற்றும் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று 8வது கட்டமாக தடுப்பு மையம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்க்ள் இன்றைய மெகா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments