தமிழகத்தில் இன்று 509 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

Webdunia
புதன், 13 மே 2020 (19:57 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று தமிழகத்தில் 509 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9227ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 509 பேர்களில் சென்னையில் மட்டும் 380 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5262ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 12,780 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழகத்தில் மொத்தம் 279,467 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 2176 பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை இந்த அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments