தமிழக அரசியல் களத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. இவர் , மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக, இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
அதில், சிதம்பரம் தீட்சிதரை கைது செய்யவில்லை. ஐ.ஐ.டி பேராசிரியரை கைது செய்யவில்லை. பிற சாதிகளை நாய்கள் என்று பிராமணர் சங்க மாநாட்டில் பேசிய வெங்கட கிருட்டிண்ணை கைது செய்யவில்லை. ஆனால் மக்களுக்காக போராடிய நாகை.திருவள்ளுவன், வெண்மணிக்கு சிறை. இந்த நாடு யாருக்கானது?? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு முன்னதாக அவர், ’17 பேர் மரணத்திற்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்யவில்லை. இறந்தவர்களுக்கு நியாயம் கேட்டு போராடிய நாகை.திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை சிறைப்படுத்தி வைக்கிறது’ என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.