Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலைய தேவையில்ல.. மின் அளவீட்டின்போதே கட்டணம் செலுத்தலாம்! – மின்சார வாரியம் திட்டம்!

அலைய தேவையில்ல.. மின் அளவீட்டின்போதே கட்டணம் செலுத்தலாம்! – மின்சார வாரியம் திட்டம்!
, புதன், 11 நவம்பர் 2020 (09:42 IST)
தமிழக முழுவதும் மின் கட்டண அளவீட்டின்போதே கட்டணத்தை செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் மின் பயனாளர்களின் மாதாந்திர மின் கட்டணம் அளவிடப்பட்ட பின் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் அருகிலுள்ள கணினி மையங்கள் மூலமாக ஆன்லைனில் பணம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் விதமாக கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி மின் கட்டண அளவீட்டை குறிக்க வரும் ஊழியர் மின் கட்டணத்தை குறித்ததும் அவரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம் டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி கட்டணத்தை உடனடியாக செலுத்தலாம்.

முதலாவதாக இது சோதனை முயற்சியாக சென்னை மாநகராட்சியில் மட்டும் அமல்படுத்த உள்ளதாகவும், வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலியை நாய் சங்கிலியுடன் ஒப்பிட்ட பேராசிரியர் – கோவாவில் இந்து அமைப்புகள் போராட்டம்!