Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமடைந்த வடகிழக்கு பருவ மழை - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:34 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை ஆகிய 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே, 8 மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாளைக்கு கனமழை அல்லது அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் திருச்சி சூர்யா மனுதாக்கல்..!

6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவு எங்கே? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

ரூ.103 டெலிவரி கட்டணம் சேர்த்த ஸ்விக்கி: பெரும் தொகையை அபராதம் விதித்த நீதிமன்றம்

அமெரிக்க தேர்தல் நடைபெறும் நாளில் ஏவுகணை சோதனை.. வடகொரியாவின் சேட்டை..!

வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. திருப்பதி அறங்காவலர் பேச்சால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments