Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக இடைக்கால பட்ஜெட்!.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?!...

Advertiesment
mk stalin

Mahendran

, சனி, 7 பிப்ரவரி 2026 (14:45 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டிற்கு பெரிதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதை திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் விமர்சித்தன. இந்நிலையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வருகிற 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார்..

அவர் அளித்த பேட்டியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 14-ஆம் தேதி துவங்கும்.  அன்றைக்கு காலை 9 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவிருக்கிறார்.. 2026-27 வருடத்திற்கான முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவு மானிய கோரிக்கை ஆகியவை 20ம் தேதி வாசிக்கப்படும்.அதேபோல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்வோம். அதேபோல் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்’ என்று கூறியிருக்கிறார்..

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை உயர்வு, கல்வி கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிதாக அரசு பொறுப்பேற்ற பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு 25 ஆயிரம்!.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு...