Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீயா நானா பாத்துடலாம்!.. விஜய் தொகுதியில் போட்டியிட திமுக திட்டம்?....

Advertiesment
vijay stalin
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியதிலிருந்தே திமுகவை மட்டுமே மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. கேட்டால் களத்தில் இருப்பவர்களை பற்றிதான் பேசுவோம் என்கிறார். அதுவும் ஈரோடு கூட்டத்தில் பேசிய விஜய் ‘திமுக ஒரு தீய சக்தி’ என உரத்த குரலில் பேசினார். அதோடு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது தொடக்க விழாவில் பேசிய விஜய் திமுக ஒரு டப்பா இன்ஜின் என நக்கலடித்தார்.

விஜய் இப்படி தொடர்ந்து திமுகவை சீண்டு வருவது திமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்த திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் விஜய் போட்டியிட்டால் இந்த கட்சிக்கு வேறு தொகுதியை கொடுத்துவிட்டு விஜய்க்கு எதிராக திமுக வேட்பாளரை அங்கே நிறுத்தவும் திட்டம் இருக்கிறதாம். விஜயை தோற்கடித்து விட்டால் திமுகவுக்கு அது முக்கிய வெற்றியாக பார்க்கப்படும்.. அதோடு, விஜயின் இமேஜும் குறைந்து போகும் என திமுக தலைமை நினைக்கிறதாம்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் கொண்டு வாங்க!.. போலீஸ் செக்!.. சேலத்தில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!..