தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள் தயாராகி வரும் நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது குறித்து நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் பதில் அளித்துள்ள தமிழக அரசு, மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்தே தீர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைன் வகுப்புகள், குறிப்புகள் அனுப்புதல் போன்றவையும் தொடர்ந்து நடைபெறும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவே பள்ளிகள் திறக்கப்படுகிறது என கூறியுள்ளது.