Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமோனியா வாயுக்கசிவு எதிரொலி: ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (10:25 IST)
எண்ணூர் அருகே இயங்கி வந்த தனியார் அமோனியா தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் என்பதையும் பார்த்தோம்,

இந்த நிலையில் எண்ணூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

நேற்று நள்ளிரவு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட ஆலையிலிருந்து அமோனியா வாயு கசிவானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments