பிஸ்கட் போடும் அறிவாலயத்திற்கு கமல்ஹாசன் தனது விசுவாசத்தை காட்டுகிறார் என்று பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் எண்ணூர் சென்ற கமல்ஹாசன் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் மீது கடும் விமர்சனம் வைத்தார். சென்னை வெள்ளம் குறித்து எந்த வித விமர்சனமும் செய்யாதவர், வேளச்சேரியில் லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை எந்தவிதமான விமர்சனம் செய்யாத கமல், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தை மட்டும் குறை கூறியுள்ளது ஒருதலை பட்சமானது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் மாரிதாஸ் தனது சமூக வலைத்தளத்தில், சென்னை மழை பாதிப்புக்கு காரணமான ஸ்டாலின் அரசை விமர்சனம் செய்ய வக்கு இல்லாத கமலஹாசன் - இது தான் "டிஜிட்டல் இந்தியாவா" என சென்னை வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு தான் காரணம் என்பது போல் மொத்தமாக சாயம் பூச முயற்சிப்பது அவருக்கு பிஸ்கட் போடும் அறிவாலயத்திற்கு அவர் காட்டும் விஸ்வாசத்தை காட்டுகிறது!
தமிழக அரசை குறை சொல்ல கூடாது என்று சொன்னது போன வாரம் அது வேற வாய்! சென்னை மழைக்கு மத்திய அரசை குறை சொல்வது இந்த வாரம்! இது என்ன வாய்? கூச்சமே இல்லாத நடிப்பு என்றும் பதிவு செய்துள்ளார்.