Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசு ஒரு பிணம்: கௌதமன் கொந்தளிப்பு

தமிழக அரசு ஒரு பிணம்: கௌதமன் கொந்தளிப்பு
, வியாழன், 13 ஏப்ரல் 2017 (16:46 IST)
இனியும் தமிழக அரசு டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் ஒதுங்கிப்போனால் அது அரசு அல்ல, அதற்கு பெயர் பிணம் என்று இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.


 

 
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று காலை மாணவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இயக்குநர் கௌதமன் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
 
இந்த போராட்டம் குறித்து இயக்குநர் கௌதமன் கூறியதாவது:-
 
எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த போராட்டத்தை நடத்தக் காரணம், தமிழக அரசு கையாலாகாத அரசாக உள்ளது. எங்களை பாதுகாப்பதற்கு தான் தமிழக அரசு தவிரே, ஊழல்களில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல. 
 
தமிழக எம்.பி.க்கள் இந்நேரம் நாடாளுமன்றத்தை முடக்கி இருக்க வேண்டாமா? எதற்காக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்கள்? இனியாவது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும். ஆதரவாக குரல் கொடுக்காமல் ஒதுங்கி போனால் அது தமிழக அரசு அல்ல, அதற்கு பெயர் பிணம், என்றார்.
 
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 15 நாட்கள் சிறையில் அடைக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை இலையை மீட்க தினகரன் தீட்டிய திட்டம்....