Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருது குறித்து சர்ச்சை கருத்து: ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்குகள்

Advertiesment
விருது குறித்து சர்ச்சை கருத்து: ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்குகள்
, செவ்வாய், 28 ஜனவரி 2020 (17:55 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டிவிட்டு, இப்படிப்பட்ட ஒரு அரசுக்கு விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் என்று கூறினார் 
 
திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு கொடுத்த விருதை குறை கூறுவதா? என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் விருது குறித்து ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதேபோல் கடந்த டிசம்பர் மாதத்திலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது முகநூலில் ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்ததாகவும் அவதூறு வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பள பாக்கி: போராட்டத்தில் இறங்கிய BSNL ஊழியர்கள்!