Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வித்துறையின் அதிரடி மாற்றம்: புதிய அதிகாரிகள் நியமனம்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:21 IST)
கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் தலைமைச் செயலாளர் முதல் பல உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது அதிரடியாக கல்வித்துறையிலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசு தேர்வுத்துறை இயக்குநராக எஸ்.சேதுராமவர்மா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடக்கக் கல்வி இயக்குநராக அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  
 
மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கூடுதல் திட்ட இயக்குநராக இராமேஸ்வர முருகன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உத்தரவு ஒன்றை தமிழ்நாடு அரசு சற்றுமுன் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments