Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மயான பணியாளர்கள் இனி முன்களப் பணியாளர்கள்: தமிழக அரசு!

மயான பணியாளர்கள் இனி முன்களப் பணியாளர்கள்: தமிழக அரசு!
, வியாழன், 18 நவம்பர் 2021 (11:03 IST)
கொரோனா காலத்தில் முக்கிய பணியாற்றிய மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 
 
கொரோனா காலத்தில் முன்கள பணியார்கள் பலர் நமக்காக போராடினர். இந்நிலையில் மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் போது இறந்த பலரின் உடலை இந்த மயான பணியாளர்களே பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர். எனவே இவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் சிறப்பு சலுகை கிடைக்கும் வகையில்  மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
இதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் இனி முன்கள பணியாளர்களான மயாம பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும், பணி காலத்தில் உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு