முதல்வரின் முகவரி என்ற புதிய துறையை ஏற்படுத்தி இருப்பதாக தமிழக அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது