இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின மீதான் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது.
அதில் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதனிடையே, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தண்டனையை நிறுத்திவைக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது .
இதனையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், தண்டனை அளிக்கப்பட்டதால், அவர் பதவியில் இருந்த ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணையின் முடிவு இன்று மதியம் வெளியாக இருக்கிறது. இதில் அவர் தப்புவாரா அல்லது தண்டனையில் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.