கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தாக புகார் எழுந்துள்ளது.
	
	
	பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிறைபிடிப்பது, சுட்டுக்கொல்வது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகின்றது. இந்த விவகாரம் குறித்து பல வருடங்களாக விவாதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனவே ஒழிய இதற்கு முடிவு கட்டும் வகையில் எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 1000 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தாக தற்போது புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.