Publish Date: Wed, 10 Jan 2018 (18:19 IST)
Updated Date: Wed, 10 Jan 2018 (18:32 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி சிறப்பு நிகழ்வாக கருதி அனைத்து பள்ளிகளும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக கருதி ஒருநாள் முன்னதாகவே கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்களுக்கு இந்த விடுமுறை ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆம் தேதி சனிக்கிழமை போகி கொண்டாட்டம். 14ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் விழா. இந்நிலையில் சனி, ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை. கூடுதலாக திங்கள் மற்றும் செவ்வாய் மட்டும் விடுமுறை. இந்நிலையில் தமிழக அரசு பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக விடுமுறை அளித்துள்ளது. இதற்கு பெரிய அளவில் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
webdunia
Publish Date: Wed, 10 Jan 2018 (18:19 IST)
Updated Date: Wed, 10 Jan 2018 (18:32 IST)