Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தமிழக காங்கிரஸ் பரபரப்பு தகவல்!

Advertiesment
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தமிழக காங்கிரஸ் பரபரப்பு தகவல்!
, ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (14:59 IST)
சென்னையில் செப்டம்பர் 26ம் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 1ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் மனித சங்கிலி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவை மீறி தமிழக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 
 
மத்திய பாஜக நிறைவேற்றியுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத அவசரச் சட்டங்களை கண்டித்து நாளை அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் கொருக்குப்பேட்டை பவர்ஹவுஸ் வைத்தியநாதன் பாலம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் அவர்கள் தலைமையில் சென்னை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம் எஸ் திரவியம் முன்னிலையில் நடைபெறுகிறது 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் சிலை அவமதிப்பு, கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும்: எல்.முருகன்