Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இபாஸ் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை: இன்னும் சில நிமிடத்தில் அறிவிப்பா?

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:32 IST)
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இருப்பினும் கடந்த சில வாரங்களாக இபாஸ் பெற்று மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இருப்பினும் இபாஸ் பெறும் நடைமுறைகளில் சிக்கல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு இபாஸ் நடைமுறையை தேவையில்லை என்றும் மாநில அரசுகள் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது 
இதனை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் இபாஸ் ரத்து செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் அறிவித்தார்
 
இந்த நிலையில் தமிழகத்தில் இபாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். மாநில அமைச்சர்களும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சர்களுடன் இபாஸ் ரத்து குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் இபாஸ் ரத்து தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments